ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வந்தாலும், மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியே மிகுந்த மகத்துவம் வாய்ந்தது என்பதால் அதனை மகா சிவராத்திரி என்றழைக்கின்றனர்.
சிவபெருமானை விரதமிருந்து வழிபடுவதற்கான மிகச் சிறந்த நாள் மகா சிவராத்திரி என்று புராணங்கள் குறித்துள்ளன.
சிவபெருமானின் அங்கமான பார்வதி தேவி விளையாட்டாக ஒருமுறை சிவனின் கண்களைத் தனது கரங்களால் மூடிவிட, சிவனின் கண்களே சூரியனும், சந்திரனும் ஆதலால், பிரபஞ்சத்தை இருள் சூழ்ந்தது. இருளில் இருந்து பிரபஞ்சத்தை மீட்க தேவர்களும், முனிவர்களும் ஒரு நாள் முழுவதும் சிவனிற்கு பூசை செய்தனர். அந்த நாளே மகா சிவராத்திரியாக கடைபிடிக்கப்படுவதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
Friday, March 7, 2008
மகா சிவராத்திரி
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Thanxs for this beautiful information ...this is really very beautiful site..love to see your blog....!
Post a Comment